மாவட்ட செய்திகள்

படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு - மீனவர்கள் சாலை மறியல்!

துண்டில் முள்வளைவு அமைக்காததால் தான் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்ததாக கூறி கிழக்கு கடற்கரை சாலையில் சின்னமுதலியார்சாவடி மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் சின்னமுதலியார்சாவடி மீனவ கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் 200-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தின் இருபக்கமும் உள்ள தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம் கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சின்ன முதலியார் சாவடி தூண்டில் முன்வரைவு அமைக்கப்படவில்லை. இதனால் பாதுகாப்பு இல்லாத நிலையில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை 4 மணிக்கு சின்னமுதலியார்சாவடி குப்பத்தை சேர்ந்த மீனவர் மூர்த்தி (வயது 65) என்பவர் உட்பட 4 பேர் மீன் பிடிக்க சென்றனர். கடல் சுரப்பு அதிகமாக இருந்த காரணத்தால் படகு கவிழ்ந்தது. நான்குபேரும் கடலுக்குள் மூழ்கினார்கள்.

இதில் வீரப்பன் மட்டும் மூழ்க மற்ற 3 பேரும் தப்பி கரை வந்தனர். மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து படகுகளில் சென்று தேடியபோது வீரப்பன் இறந்தது தெரியவந்தது.

இதனை கண்டித்து சின்னமுதலியார் சாவடி சேர்ந்த மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். படகு கவிழ்ந்து விபத்தில் இறந்த வீரப்பனின் உடலை வைத்து அவர்கள் சாலையில் அரை மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு போலீசார் மற்றும் மீன்வள அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விரைவில் தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு