மாவட்ட செய்திகள்

மெரினா அருகே நடைபெற்ற ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

சென்னை கண்ணகிநகரை சேர்ந்தவர் ராஜேஷ் என்ற கிளி ராஜேஷ் (வயது 34). இவரும், திருவல்லிக்கேணி நீலம் பாஷா தர்கா பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவரும் நண்பர்கள். 2 பேரும் ரவுடிகள் ஆவர். மெரினா நடுக்குப்பம் பகுதியில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 பேரும் நிபந்தனை ஜாமீனில் கடந்த 8-ந்தேதி வெளியே வந்தனர்.

தினத்தந்தி

மெரினா போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். நேற்றுமுன்தினம் கையெழுத்து போட்டுவிட்டு ராஜேசும், ஜான்சனும் விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள டாக்டர் பெசன்ட் சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் 2 பேரையும் வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தியது. இரும்பு கம்பியாலும் தாக்கினர். இதில் ராஜேஷ் உயிரிழந்தார். ஜான்சன் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். இதுகுறித்து மெரினா போலீசார் நடத்திய விசாரணையில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி அயோத்திகுப்பத்தை சேர்ந்த ஏழுமலை (25), ஐஸ்அவுஸ் கிருஷ்ணாம்பேட்டை முனுசாமி நகரை சேர்ந்த அருண்குமார் (22), மயிலாப்பூரைச்சேர்ந்த வீரா (21), கும்பகோணத்தை சேர்ந்த லோகேஷ் என்ற ராஜேஷ் (20), திருச்சியை சேர்ந்த காட்டான் என்ற காத்தவராயன் (20) ஆகிய 5 பேரை மெரினா போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள் மற்றும் இரும்பு கம்பி பறிமுதல் செய்யப்பட்டது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு