மாவட்ட செய்திகள்

மின் பஸ் டிரைவருக்கு அடி-உதை

தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவருக்கு அடி, உதை விழுந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்

தினத்தந்தி

தூத்துக்குடி:

தூத்துக்குடி கே.வி.கே.நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). மினிபஸ் டிரைவர். இவர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் பஸ்சில் ஆட்களை ஏற்றிக் கொண்டு இருந்தாராம். அப்போது, முன்பு செல்ல வேண்டிய மற்றொரு மினிபஸ்சில் அதற்கு உரிய நேரத்துக்கு பிறகும் ஆட்களை ஏற்றி கொண்டு இருந்தார்களாம். இதனால் அந்த மினிபஸ் டிரைவர் ரூபன், கண்டக்டர் மாரிமுத்து ஆகியோரை மணிகண்டன் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ரூபன், மாரிமுத்து ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை