மாவட்ட செய்திகள்

ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றியங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்ட வாக்குச்சீட்டு பெட்டிகள்

ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றியங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சீட்டு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டன.

தேனி,

தேனி மாவட்டத்தில் மொத்தம் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் முதல்கட்டமாக வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் வாரியாக வாக்குச்சீட்டு தயார் செய்யப்பட்டது. இந்த வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள், வாக்குப்பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்பட்டன. இந்த வாக்குச்சீட்டு பெட்டிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் எடுத்து செல்லப்பட்டன.

ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களுக்கு வாக்குச்சீட்டுபெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வாக்குச்சீட்டு பெட்டிகள் வைக்கப்பட்ட அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன. இந்த அறைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு