மாவட்ட செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் ஆணைய துணைத்தலைவரிடம் கோரிக்கை

மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சிறுபான்மை ஆணைய துணைத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

காரைக்கால்,

காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில், சிறுபான்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறுபான்மை ஆணையத்தின் துணைத்தலைவர் ஜார்ஜ் குரியன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா மற்றும் சிறுபான்மை இன முக்கிய பிரதிநிதிகள் மற்றும் சமாதான கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் புதுவையில் 2 சதவீதமே வழங்கப்படுவதால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சிறுபான்மையின மாணவர்கள் பின்தங்கி வருகிறார்கள். அரசு வேலையில் எங்களுக்கு வாய்ப்பு இல்லை.

மேலும், காரைக்காலில் உள்ள வக்பு வாரியத்திற்கு அதிகாரிகள் நியமித்து 3 ஆண்டுகள் ஆகிறது. காலியாக உள்ள பதவிகளை நிரப்பாததால் யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் வரை தான் உள்ளது. இதை உயர்த்தி வழங்க வேண்டும் என சிறுபான்மை இன பிரதிநிதிகள் ஆணையத்திடம் முறையிட்டனர்.

கோரிக்கைகளை கேட்ட ஆணையத்தின் துணைத்தலைவர் ஜார்ஜ் குரியன், டெல்லியில் உள்ள சிறுபான்மை ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வமாக மனுக்களை அடிக்கடி அனுப்புங்கள். நானும் உங்கள் கருத்தை அங்கு முறைப்படி கொண்டு செல்கிறேன். அனைத்து கோரிக்கைகளும் விரைவில் பரிசீலிக்கப்படும் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்