வாலாஜாபாத்,
தமிழகம் முழுவதும் கோர்ட்டு உத்தரவுப்படி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் போலீசார் பல்வேறு இடங்களில் முகாம்களை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் படாளம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் படாளம் கூட்டுசாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
இதேபோல் செய்யூர் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் தலைமையிலான செய்யூர் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.