மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில், பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் - அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது.

விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டன. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 802 மாணவர்களும், 20 ஆயிரத்து 896 மாணவிகளும் என மொத்தம் 39 ஆயிரத்து 698 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 15 ஆயிரத்து 667 மாணவர்களும், 18 ஆயிரத்து 413 மாணவிகளும் ஆக மொத்தம் 34 ஆயிரத்து 80 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பிற்கு எந்தவித சிரமமும் இன்றி முன்கூட்டியே விண்ணப்பிக்க ஏதுவாக கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி நேற்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதற்காக மாணவ- மாணவிகள் அனைவரும் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றனர். சில மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுச்சென்றனர். விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 முடித்த மாணவிகள் ஆர்வமுடன் வந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுச்சென்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்