மாவட்ட செய்திகள்

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்: கல்லூரி மாணவியின் ஆபாச படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பிய - வாலிபர் கைது

திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியின் ஆபாச படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

போத்தனூர்,

கோவை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ஒருவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தங்கி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு, அதே கல்லூரியில் படித்த தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த தேவேஸ்வர் (வயது 22) என்ற மாணவருடன் நட்பாக பழகினார். நாளடைவில் அது காதலாக மாறியது.

இதைத்தொடர்ந்து அவர் கள் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்த்து வந்தனர். அவர்கள் தங்களை செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்து இருந்தனர். இந்தநிலையில் கொரோனா காரணமாக கல்லூரி மூடப்பட்டதால் அவர்கள் இருவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். ஆனாலும் செல்போனில் பேசி அவர்கள் தங்களின் காதலை வளர்த்து வந்தனர்.

இதற்கிடையே இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள், காதலை கைவிடுமாறு கூறி மகளை கண்டித்தனர். இதனால் அந்த மாணவி தேவேஸ்வரருடன் செல்போனில் பேசுவதை தவிர்த்து வந்தார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தேவேஸ்வர் அந்த மாணவியை செல்போனில் தொடர்புகொண்டு வீட்டுக்கு தெரியாமல் வெளியேறி திருமணம் செய்துகொள்ளலாம். நான் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு கோவை வந்து உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவி தனது பெற்றோரை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அப்போது தேவேஸ்வர், நான் சொன்னபடி வரவில்லை என்றால் நாம் இருவரும் தனியாக இருக்கும்போது எடுத்த ஆபாச புகைப் படங்களை சமூக வலைத்தளங்கள் வெளியிடுவேன். மேலும் அந்த ஆபாச படங்களை உனது தந்தையின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே தேவேஸ்வர் மாணவியின் தந்தையின் செல்போன் எண்ணுக்கு மாணவியின் ஆபாச புகைப்படங்களை அனுப்பினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, இது குறித்து தனது மகளிடம் கேட்டார். அதற்கு அந்த மாணவி, என்னை நானே செல்போனில் எடுத்து வைத்திருந்த புகைப்படங்களை தேவேஸ்வர் எனக்கு தெரியாமலேயே எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதாக கூறினார்.

தேவேஸ்வருக்கு தூத்துக்குடி மாவட்டம் என்பதால் அவரை கோவைக்கு வரவழைத்து போலீசில் ஒப்படைக்க அந்த மாணவியின் பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி அந்த மாணவி, தேவேஸ்வரரிடம் நைசாக பேசி கோவைக்கு வருமாறு கூறினார். முன்னதாக இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோருடன் சென்று குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலை மையிலான போலீசார், தேவேஸ்வரரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில், அவர் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டார். அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவில் வழக்குபதிவு செய்து, கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து, அதில் இருந்த மாணவியின் புகைப்படங்களை அழித்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படத்தை அவரின் தந்தைக்கு அனுப்பி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்