மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட செஸ் போட்டி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேனி மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.

தினத்தந்தி

தேனி:

தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான செஸ் போட்டி தேனியில் நடந்தது. தேனி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சேகர், பெரியகுளம் துணை மின்நிலைய இளநிலை பொறியாளர் ரோஜாராணி, தேனி கிராம வங்கி மேலாளர் பவித்ரா ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 126 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். வயதுவாரியாக 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் அகாடமி நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அகாடமி தலைவர் சையது மைதீன் செய்திருந்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு