மாவட்ட செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் காஞ்சீபுரம் அத்திவரதருக்கு பட்டு வஸ்திரம்

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். அங்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பாக பட்டு வஸ்திரத்தை சமர்ப்பித்தனர்.

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி ஆகியோர் நேற்று காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். அங்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பாக பட்டு வஸ்திரத்தை சமர்ப்பித்தனர். முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த அவர்களை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, கோவில் அதிகாரி தியாகராஜர் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

இதேபோல திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்ற அனில்குமார் சிங்கால் மற்றும் தர்மாரெட்டி ஆகியோர் ஏழுமலையான் கோவில் சார்பில் பட்டு வஸ்திரத்தை வழங்கினர்.

அவர்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜெயசங்கர் உள்பட கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஆடி கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு ஏழுமலையான் கோவில் சார்பில் பட்டு வஸ்திரம் வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்