மாவட்ட செய்திகள்

குறைந்த விலை நாப்கினுக்காக ‘செல்போன் செயலி’ முதல்–மந்திரி தொடங்கி வைத்தார்

கிராமப்புற பெண்களுக்கு குறைந்த விலையில் நாப்கின் வழங்கும் திட்டத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக புதியதாக ‘ செல்போன் செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது.

மும்பை,

முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த செயலியை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து கிராமப்புற வளர்ச்சி துறை மந்திரி பங்கஜா முண்டே கூறியதாவது:

இந்த செயலி மூலமாக பதிவு செய்யப்படும் நாப்கின்கள் பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் வினியோகம் செய்யப்படும். குறிப்பாக கிராமப்புறத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் 17 சதவீத கிராமப்புற பெண்கள் மட்டுமே நாப்கின்கள் உபயோகப்படுத்துகின்றனர். நாப்கின் உபயோகிக்காததால் பெண்களின் தனிப்பட்ட சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. தேவையில்லாத நோய் தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். இந்த திட்டம் மூலம் நாப்கின்கள் குறைந்த விலையில் வழங்கப்படுவதால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், 50 பெண்களுக்கு அடுத்த 12 மாதத்திற்கான நாப்கின் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

இதேபோல மந்திரி பங்கஜா முண்டேவும் 151 பெண்களுக்கான 12 மாத நாப்கின் செலவை ஏற்பதாக கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு