மாவட்ட செய்திகள்

மணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

மானாமதுரை அருகே கல்குறிச்சி பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கிராம மக்கள் எந்திரம் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

மானாமதுரை,

மானாமதுரை அருகே கல்குறிச்சி பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கிராம மக்கள் எந்திரம் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.

எதிர்ப்பு

மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்தின் வழியாக செல்லும் வைகை ஆற்று பகுதியில் மணல் குவாரி அமைக்க அரசு உத்தரவிட்டு உள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து குவாரி ஏலம் எடுத்தவர்கள் மானாமதுரை புதிய வைகை யாற்று பாலத்தின் அருகில் இருந்து மணல் குவாரிக்கு செல்வதற்காக கடந்த சில நாட்களாக பாதை அமைத்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே கல்குறிச்சி அருகே தடுப்பணை கட்டு வதற்காக கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் அதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அரசு மாவட்ட நிர்வாகம் சார்பில் தனி யாருக்கு மணல் குவாரி அமைக்க உத்தரவிட்டு உள்ளதை தொடர்ந்து அதற்காகத்தான் ஆற்றுக்குள் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறி நேற்று காலை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் கல்குறிச்சி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் குவாரி அமைய உள்ள பகுதிகளில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயம், குடிநீர் பாதிப்பு

மேலும் பாதை அமைக்கும் பணிக்காக கொண்டுவரப்பட்ட எந்திரங்கள் மீது ஏறி நின்று கோஷம் போட்டு மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவிரி-குண்டாறு கிருதுமால் செயலாளர் மலைச்சாமி கூறியதாவது:- ஏற்கனவே கடந்த முறை இதே இடத்தில் குவாரி அமைக்க பணிகள் நடந்தபோது இந்தபகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் குவாரி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த பகுதியில் மீண்டும் குவாரி அமையும் பட்சத்தில் இங்குள்ள 72 கூட்டு குடிநீர் திட்டங்கள் அடியோடு முடங்கும் நிலை ஏற்படும்.

இப்பகுதியில் இருந்துதான் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வைகையாற்றில் குவாரி அமைக்கும் பட்சத்தில் விவசாய நிலங்கள் அனைத்தும் அழியும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு