மும்பை,
தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஓட்டலில் நேபாளத்தை சேர்ந்த பரத் தாபா(வயது18) என்ற வாலிபர் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உல்லாஸ்நகர் பகுதியில் பரத் தாபா உடலில் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
4 பேர் கைது
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சம்பவத்தன்று அவரை ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள் திருடன் என சந்தேகப்பட்டு காரில் கடத்தி சென்று அடித்து கொலை செய்து உடலை வீசிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய கல்யாணை சேர்ந்த திபேஷ், கணேஷ், விஷால், நாயன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்தில் தொடர்புடைய பலரை தேடி வருகின்றனர்.