மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 பேர் கைது

கடலூர் தேவனாம்பட்டினத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடலூர்

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே கடலில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த 15-ந்தேதி தேவனாம்பட்டினம் மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

அப்போது அவர்களை தேவனாம்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தடுக்க முயன்ற போது அவரை தேவனாம்பட்டினம் மீனவர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்ய முயன்றனர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 12 பேரை கைது செய்தார்.

இந்த வழக்கில் நேற்று மேலும் 4 பேரை இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்தார். கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1.விக்ரமாதித்தன் (வயது44), 2.சந்தோஷ்(21), 3.லெனின்(27), 4.உதயகுமார்(22). இவர்கள் 4 பேரும் தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச்சேர்ந்தவர்கள். இவர்கள் சம்பவத்தன்று பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு