திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான கே.சுப்பு என்கிற சுப்பிரமணியன் தலைமை தாங்கி 624 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் யமுனாபாய், கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மணி, நகர துணை செயலாளர் ராணி, நகர பொருளாளர் ஷபி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பாலாஜி, கூட்டுறவு வங்கி இயக்குனர் அன்பரசன், நகர பாசறை செயலாளர் பாலு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவிகள் கலந்து கொண்டனர்.