மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் 914 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

கள்ளக்குறிச்சியில் 914 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் கலெக்டர் கிரண்குராலா, பிரபு எம்.எல்.ஏ. வழங்கினர்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜசேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் கிரண்குராலா, பிரபு எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ரூ.35 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 370 பேர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 544 பேர் என மொத்தம் 914 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், பெற்றோர்-ஆசிரியர் கழக செயலாளர்கள் குபேந்திரன், சர்புதீன், துணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி, துணைத் தலைவர்கள் ரவி, அப்துல்கரீம், இயக்குனர் அருண்கென்னடி மற்றும் இயக்குநர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்