தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மவுண்ட் பார்க் பள்ளி தரமான கல்வியை வழங்கி வருகின்றது. கிராமப்புற ஏழை மாணவர்கள் இப்பள்ளியில் படித்து மருத்துவம், பொறியியல் துறையில் சாதித்துள்ளனர். பலர் அரசு ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொருவரிடமும் தனி கவனம் செலுத்தி கல்வியில் முன்னேற்றம் அடைவதை நோக்கமாக கொண்டு தகுதியான ஆசிரியர் குழுவினர் மூலம் பயிற்சி அளிக்கப்படுகின்றது.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மேல்நிலை வகுப்பில் சேர ஒவ்வொரு ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி மற்றும் விடுதியில் முழு கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் எங்களது பள்ளியில் படித்து பயனடைந்துள்ளனர்.
பள்ளியை தொடர்பு கொள்ளலாம்
தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு அறிவித்துள்ளது. அதை பயன்படுத்திஅரசு பள்ளி மாணவர்கள் பலர் டாக்டராக வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சியை இந்த கல்வி ஆண்டில் இருந்து எங்களது பள்ளியில் வழங்க உள்ளோம். தகுதியான சிறப்பு ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே நீட் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் பள்ளியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.