மாவட்ட செய்திகள்

ஆந்திர மாநிலத்தில் இருந்து பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தினத்தந்தி

திருவள்ளூர்,

ஆந்திர மாநில மதுபானங்கள் அதிக அளவில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு கடத்தப்பட்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பென்னலூர்பபேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட அல்லிக்குழி கிராமத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக ஸ்ரீபெரும்புதூர் நோக்கி தனியார் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்த பஸ்களை திருவள்ளூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் நிறுவன பஸ்சை சோதனை செய்தபோது, அதில் 9 ஆந்திர மாநில மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ஊத்துக்கோட்டை அல்லிகுழி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முனுசாமி (வயது 26) என்பவரை திருவள்ளூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது