மாவட்ட செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டு மந்திரி அசோக் சவான் வீடு திரும்பினார்

கொரோனாவில் இருந்து மீண்டு மந்திரி அசோக் சவான் வீடு திரும்பினார்.

மும்பை,

மராட்டிய காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான். தற்போது காங்கிரஸ் அங்கம் வகிக்கும் சிவசேனா தலைமையிலான மாநில கூட்டணி அரசில் இவர் பொதுப்பணித்துறை மந்திரியாக உள்ளார். கடந்த மாதம் மந்திரி அசோக் சவான் தனது சொந்த ஊரான நாந்தெட்டில் இருந்த போது, அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உடனடியாக மும்பை அழைத்து வரப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து மந்திரி அசோக் சவான் கொரோனா தொற்றில் இருந்து மீண்டார். நேற்று டாக்டர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்தனர். இதையடுத்து வீடு திரும்பிய மந்திரி அசோக் சவானை குடும்பத்தினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இரண்டாவது மராட்டிய மந்திரி அசோக் சவான். ஏற்கனவே தேசியவாத காங்கிரசை சேர்ந்த மந்திரி ஜிதேந்திரஅவாத் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்