மாவட்ட செய்திகள்

புனேவில் இருந்து 1 லட்சம் தடுப்பூசி சென்னை வந்தது

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக மத்திய அரசிடம் இருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை.

எனவே தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குங்கள் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அத்துடன் தமிழக அரசே நேரடியாக தடுப்பூசிகளை வாங்கவும் முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்துக்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது.

இந்தநிலையில் புனேவில் இருந்து 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானத்தில் சென்னை வந்தது. 9 பார்சல்களில் வந்த தடுப்பூசி மருந்துகளை சென்னை விமான நிலையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறையினா பெற்றுக்கொண்டு சென்னையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து சென்றனா. அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு