மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பட்டதாரி வாலிபர் சாவு

விழுப்புரத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மருதூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரெயில்வே தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து உடனடியாக விழுப்புரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர் உளுந்தூர்பேட்டை வடபாதி காலனி அம்பேத்கர் தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் கஜேந்திரபெருமாள் (வயது 29) என்பதும் பொறியியல் பட்டதாரி எனவும் தெரிந்தது.

மேலும் விசாரணையில் இவர் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து ரெயிலில் விழுப்புரத்திற்கு சென்றபோது படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து இறந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கஜேந்திரபெருமாளின் உடலை, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு