மாவட்ட செய்திகள்

இன்று முழுஊரடங்கு: தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழுஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

தூத்துக்குடி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஏற்கனவே 3 வாரம் முடிவடைந்த நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 4-வது வாரமாக ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

முழுஊரடங்கை அமல்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. அத்தியாவசிய தேவைக்காக பால் கடைகள், மருந்தகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்றபடி அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. அதேபோன்று அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் சுற்றித்திரிய வேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் இன்று முழுஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி நேற்று தூத்துக்குடியில் மார்க்கெட், கடைகளில் காய்கறிகள், பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தற்காலிக மார்க்கெட்டிலும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி சென்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு