மாவட்ட செய்திகள்

பயணி எட்டி உதைத்ததில் தண்டவாளத்தில் விழுந்த கேங்மேன் ரெயிலில் அடிபட்டு சாவு

மகாலெட்சுமி ரெயில் நிலையம் அருகேபயணி எட்டி உதைத்ததில் தண்டவாளத்தில் விழுந்த கேங்மேன் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை மகாலெட்சுமி ரெயில் நிலையம் அருகே வழக்கமான தண்டவாள பராமரிப்பு பணி நடந்து கொண் டிருந்தது. அப்போது, அந்த வழியாக சர்ச்கேட் நோக்கி மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, பணியில் ஈடுபட்டிருந்த கேங்மேன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகி நின்று கொண்டிருந்தனர்.

ரெயில் அவர்களை கடந்து சென்று கொண்டிருந்த போது, வாசலில் நின்று பய ணம் செய்த பயணி ஒருவர் தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த கேங்மேன் சர்வான் சனப்(வயது45) என்பவரை எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.

இதில், நிலைதடுமாறிய அவர் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது, அந்த வழியாக போரிவிலி நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரெயில் அவர் மீது மோதிச் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற கேங்மேன்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த் தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு ப்பதிவு செய்து, அவரது சாவுக்கு காரணமான பயணியை வலைவீசி தேடிவருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது