மாவட்ட செய்திகள்

அம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

அம்மா இருசக்கர வாகனம்

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 50 சதவீதம் (அதிகபட்சம் ரூ.25 ஆயிரம்) மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டுக்கான இருசக்கர வாகனம் வழங்க அரசு அனுமதி அளித்து உள்ளது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுவன பணி மற்றும் முறைசாரா பணியில் உள்ள பெண்கள், கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் உள்ள பெண்கள், அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் மகமை அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள், பெண் வங்கி ஒருங்கிணைப்பாளர், பெண் வங்கி வழிநடத்துனர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வைத்து இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் வேலைக்கு செல்லும் பெண்கள், அதற்கான விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். பஞ்சாயத்து பகுதியில் உள்ள பெண்கள் விண்ணப்ப படிவத்தை யூனியன் அலுவலகத்திலும், நகர பஞ்சாயத்து பகுதியில் உள்ள பெண்கள் நகர பஞ்சாயத்து அலுவலகத்திலும், நகராட்சி பகுதியில் உள்ளவர்கள் நகராட்சி அலுவலகத்திலும், மாநகராட்சியில் உள்ளவர்கள் மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் பிறந்த தேதிக்கான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகன உரிமம் நகல் அல்லது இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமத்துக்கு மனு செய்துள்ளவர்கள், அதற்கான நகலுடன் விண்ணப்பிக்கலாம். வேலை வழங்கும் அலுவலர், நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமான சான்றிதழ், நிறுவன தலைவர், சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதிய சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை நகல், 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்டடோர், பழங்குடியினர்), மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி ஆகியவற்றுடன் வருகிற 4-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்