மாவட்ட செய்திகள்

சிலம்பம் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு; நடிகர் எஸ்.வி.சேகர் வழங்கினார்

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா குடியிருப்போர் சங்கம் சிலம்பம் கமிட்டி, சென்னை சிலம்பம் கிங்ஸ் அமைப்பு சார்பில் சிறுவர்-சிறுமிகளின் பாதுகாப்புக்காக சிலம்பம் உள்பட பல்வேறு தமிழக பாரம்பரிய கலைகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

பாலகுமார், தாமஸ், பிரகாஷ், மணி, நித்யா, வித்யா ஆகிய தன்னார்வலர்கள், சிறுவர்-சிறுமிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

இந்த அமைப்பின் ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் எஸ்.வி.சேகர், எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ், சந்துரு ஆகியோர் கலந்துகொண்டு சிலம்பம் போட்டியில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் சிலம்பம் பயின்று வரும் மாணவ-மாணவிகளையும், அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் தன்னார்வலர்களையும் எஸ்.வி.சேகர் வெகுவாக பாராட்டினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்