மாவட்ட செய்திகள்

108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை

108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது

கரூர்,

கரூர் மாவட்டம், களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் கவிதா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவர், 2-வது பிரசவத்திற்காக காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கிருந்து அவர், மேல் சிகிச்சைக்காக காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆம்புலன்ஸ் புலியூர் அருகே வந்தபோது கவிதாவிற்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது கவிதாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் சண்முகம் மற்றும் வாகன ஓட்டுனர் லோகேஷ் ஆகியோரை கவிதாவின் உறவினர்கள் பாராட்டினர்

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்