மாவட்ட செய்திகள்

காரைக்காலில் அம்மனின் தாலி சங்கிலி, உண்டியல் பணம் திருட்டு

காரைக்காலில் அம்மனின் தாலி சங்கிலி, உண்டியல் பணத்தை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

கோட்டுச்சேரி, செப்.

காரைக்காலை அடுத்த கருக்களாஞ்சேரி மீனவர் கிராமத்தில் ஏழை மாரியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று மாலை கோவிலை பூசாரி பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் தெய்வானை என்பவர் சுத்தம் செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது மேற்கூரை உடைந்திருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தெய்வானை கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே நிர்வாகிகள் மற்றும் நிரவி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் பெருமாள், போலீசார் அங்கு வந்து பார்த்தனர்.

அப்போது, நள்ளிரவில் கோவிலின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி, அம்மனுக்கு அணிவித்து இருந்த தாலி, தங்க காசு, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துள்ளார். மேலும் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தையும் திருடியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் காரைக்கால் மதகடி பகுதியில் உள்ள உஜ்ஜயினி காளியம்மன் கோவிலில் மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது