மாவட்ட செய்திகள்

வெர்சோவா கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்று மாயமான வாலிபர், இளம்பெண் பிணமாக மீட்பு

வெர்சோவா கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்று மாயமான வாலிபர், இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

வெர்சோவா கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்று மாயமான வாலிபர், இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

வாலிபர், இளம்பெண் மாயம்

மும்பை குர்லா பகுதியை சேர்ந்தவர் பசல் அகமது(வயது19). இவர் வெர்சோவா பகுதியை சேர்ந்த நஸ்ரின் சேக் என்ற இளம்பெண்ணுடன் பழகி வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை 2 பேரும் நண்பர்களுடன் வெர்சோவா கடற்கரைக்கு சென்றனர். மதியத்திற்கு பிறகு நண்பர்கள் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டனர். பசல் அகமது, நஸ்ரின் சேக் மட்டும் கடற்கரையில் இருந்தனர்.

இந்தநிலையில் 2 பேரும் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து 2 பேரின் குடும்பத்தினரும் தனித்தனியே போலீசில் புகா அளித்து இருந்தனர்.

உடல்கள் மீட்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் வெர்சோவா கடற்கரையில் வாலிபர் உடலும், ஜூகு கடற்கரையில் இளம்பெண் உடலும் மீட்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் மாயமான பசல் அகமது, நஸ்ரின் சேக் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்ணும், வாலிபரும் கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு