மாவட்ட செய்திகள்

வியாபாரியிடம் தங்கசங்கிலி பறிப்பு

நிலக்கோட்டை அருகே வியாபாரியிடம் தங்கசங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலபட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் ராஜ்குமார்(வயது 21). கவரிங் நகை வியாபாரி.

இவர் நேற்று முன்தினம் இரவு தனது தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக அணைப்பட்டிக்கு மொபட்டில் வந்தார்.

வழியில் அணைப்பட்டி புது பாலம் அருகே வந்தபோது மர்ம நபர்கள் 5 பேர் மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்து இருந்த தங்கசங்கிலி, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து ராஜ்குமார் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணனிடம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு