புதுச்சேரி,
புதுவை கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடி தலைமையில் கிராமப்புற வளர்ச்சி, கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கிராமப்புறங்களில் நிலத்தடி நீர் மேலாண்மையை பெருக்குதல் தொடர்பாக ஓராண்டிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் புதுவை வளர்ச்சி ஆணையர் அன்பரசு, கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸ், அரசு செயலாளர் சுந்தரவடிவேலு, தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் ருத்ரகவுடு, நபார்டு வங்கி சேர்மன் கர்ஷ்குமார் பன்வாலா, முதன்மை பொதுமேலாளர் லாகூர் அலி ஜுன்னா உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் பங்கேற்ற அதிகாரிகள் தங்களின் துறை சார்பில் ஓராண்டிற்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.