மாவட்ட செய்திகள்

ரூ.38 லட்சம் செலவில் தயாரான பசுமை பூங்கா: கலெக்டர் திறந்து வைத்தார்

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ரூ.38 லட்சம் செலவில் தயாரான பசுமை பூங்காவினை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்து வைத்தார்.

பொன்னேரி,

பொன்னேரி அருகே சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அடங்கிய ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை கிராமத்தில் சாய்கிருபா நகர் உள்ளது. இங்குள்ள 2 ஏக்கர் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு, தமிழக அரசு சார்பில் ரூ. 19 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் தனியார் நிறுவனம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பையும் சேர்த்து, ரூ.38 லட்சம் மதிப்பில் புதியதாக பசுமை பூங்கா அனைத்து வசதிகளுடன் உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவில் சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ் தனது சொந்தப் பணம் ரூ.2 லட்சம் செலவில் பூங்காவில் மின் விளக்குகளை அமைத்து கொடுத்தார்.

இதன் திறப்பு விழாவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்து கொண்டு பசுமை பூங்கா, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையத்தையும் நேற்று திறந்து வைத்தார். இவ்விழாவில் பொன்னேரி ஆர்.டி.ஓ.வித்யா, தாசில்தார் மணிகண்டன், சோழவரம் ஒன்றிய ஆணையாளர் குலசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள், குடியிருப்புவாசிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு