மாவட்ட செய்திகள்

வேறு பெண்களுடன் பழகியதால் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொத்தனார் கொலை மனைவி கைது

வேறு பெண்களுடன் பழகியதால் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொத்தனாரை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் கொமக்கம்பேடு கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலு (வயது 45). கொத்தனார். அவரது மனைவி ஞானம்மாள் (40). இவர்களுக்கு ஜெகன் என்ற மகனும், கோமதி என்ற திருமணமான மகளும் உள்ளனர். வேலு தன்னுடன் வேலை செய்யும் பெண்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார். இதனால் வேலுவின் மனைவி தனது கணவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் வேலு மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். வழக்கம்போல் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று அதிகாலை வரை தகராறு நீடித்தது.

இந்த தகராறில் வேலு, ஞானம்மாளை தாக்கி உள்ளார். தூக்க கலக்கத்தில் இருந்த ஞானம்மாள் கண் இமைக்கும் நேரத்தில் அருகில் கிடந்த கிரைண்டர் கல்லை தூக்கி வேலுவின் தலையில் போட்டார். இதில் வேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஞானம்மாள் தனது கணவரை, தானே கொலை செய்து விட்டேனே என்று கதறி துடித்தார். ஞானம்மாளின் கூக்குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

தகவலறிந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மத்தியரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஞானம்மாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்