மாவட்ட செய்திகள்

செங்குன்றம் அருகே நிலத்தடி நீர் திருட்டு - லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்

செங்குன்றம் அருகே நிலத்தடி நீரை திருடிய லாரிகளை, பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த விஜயநல்லூர் கிராமத்தில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து டேங்கர் லாரிகள் மூலம் நிலத்தடி நீரை எடுத்து சென்னையில் உள்ள கடை, வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதியில் சாலைகள் சேதம் அடைவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அப்பகுதி பொதுமக்கள், நிலத்தடி நீரை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று அந்த வழியாக நிலத்தடி நீரை ஏற்றி வந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த சோழவரம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நிலத்தடி நீர் திருடப்படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

இதையடுத்து, சிறை பிடிக்கப்பட்ட லாரிகளை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது