மாவட்ட செய்திகள்

ஜி.எஸ்.டி. மின்வழிச்சீட்டு வரி முறையில் தவறான தகவல் கொடுத்தால் சிறைதண்டனை விதிக்கப்படும்

ஜி.எஸ்.டி. மின்வழிச்சீட்டு வரி முறையில் தவறான தகவல் கொடுத்தால் 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படும் என்று திருச்சியில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி,

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்து உள்ளது. இதன் அடுத்த கட்டமாக கடந்த 1-ந்தேதி முதல் சரக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் மற்றும் டிராவல்ஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து தொழில் செய்வோர், பார்சல் சர்வீஸ் நடத்துபவர்கள் தங்களது ஜி.எஸ்.டி. வரியை இ - வே எனப்படும் மின்வழிச்சீட்டு முறையில் மட்டுமே செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி. ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மின் வழிச்சீட்டு முறையில் வரி செலுத்துவது பற்றிய கருத்தரங்கம் மற்றும் 2018-ம்ஆண்டு பொது பட்ஜெட் பற்றிய கருத்தரங்கம் நேற்று திருச்சியில் நடந்தது. தமிழ்நாடு புதுச்சேரி பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். திருச்சி கிளை தலைவர் அழகப்பன், ஆடிட்டர் அருண் பிரசாத் ஆகியோர் மின்வழிச்சீட்டு முறையில் வரியை எப்படி செலுத்துவது என்பது பற்றி விளக்கி பேசினார்கள்.

இதனை தொடர்ந்து மென்பொருள் பொறியாளர் சண்முக ராஜூ பேசும்போது மின்வழிச்சீட்டு முறையில் வரி செலுத்துவது என்பது ஜி.எஸ்.டி. யை விட கடுமையான விதிமுறைகளை கொண்டதாக உள்ளது. இதனை அதற்குரிய சாப்ட்வேரில் நுழைந்து சரியான தகவல்களை அளித்து வரியை செலுத்த வேண்டும். இதற்கு அதிக நேரம் செலவிட கூடிய சூழல் கூட ஏற்படும். இதனை தவிர்க்க தவறான தகவல் கொடுத்தால் 5 ஆண்டுகள் சிறைதண்டனை அளிக்கும் வகையில் ஜி.எஸ்.டி சட்டத்தில் இடம் உள்ளது என்றார். கருத்தரங்கில் வியாபாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு