மாவட்ட செய்திகள்

ரூ.6¼ லட்சம் குட்கா பறிமுதல் ஒருவர் கைது

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.6¼ லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

தானே மாவட்டம் மிராரோடு பகுதியில் குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் மிராரோடு நயாநகரில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த குட்கா மூட்டைகளை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சத்து 34 ஆயிரம் ஆகும்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் சச்சின் காசித் (வயது45) என்பவரை கைது செய்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு