கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டிய காட்டுக்கொல்லை தெருவை சேர்ந்தவர் கந்தன் (வயது 48). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து கந்தன் தனது மோட்டார் சைக்கிளில் சிப்காட்டில் இருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை கத்திமுனையில் வழிமறித்த 2 மர்ம நபர்கள் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1300-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்த சரண் (20), மணிகண்டன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.