மாவட்ட செய்திகள்

எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்; விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 26 பேர் கைது

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி நடந்த போராட்டத்திற்கு காஞ்சீபுரம் நகர தலைவர் கவியரசு தலைமை தாங்கினார்.

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் கலைவடிவன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

உடனடியாக காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் தலைமையில், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட கவியரசு, கலைவடிவன் உள்பட 26 பேரை கைது செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு