மாவட்ட செய்திகள்

டாக்டர்கள் வராததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ முகாமிற்கு டாக்டர்கள் வராததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு திங்கட்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் நடத்தப்படும். அதன்படி நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்கள் குடும்பத்தினர், குழந்தைகளுடன் வந்து கலந்துகொண்டனர்.
காலை 8 மணியில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அவர்கள் காத்திருந்தனர். வழக்கமாக காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு டாக்டர் குழுவினர் வருகை தருவார்களாம். ஆனால் நேற்று மதியம் 12.45 மணி வரை டாக்டர்கள் குழுவினர் வரவில்லை. கொளுத்தும் வெயிலில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் டாக்டர்கள் குழுவினர் வராததை அறிந்ததும் ஆத்திரமடைந்தனர்.
பின்னர் அவர்கள் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவர்களை அழைக்கழிப்பு செய்வதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது