மாவட்ட செய்திகள்

கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கம்பம்:

கம்பம் முல்லை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கம்பம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கருப்பையா, மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது