மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் இடி, மின்னலுடன் பலத்த மழை தாழ்வான பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

நாகர்கோவிலில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

தினத்தந்தி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

நாகர்கோவிலில் மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மதியம் 1 மணி அளவில் நாகர்கோவில் நகரில் திடீரென பலத்த இடியுடன் மழை கொட்டியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் தாழ்வான பகுதிகளில் அதாவது ஒழுகினசேரி, ஆராட்டு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது.

இதேபோல் நாகர்கோவில் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைப் பகுதிகள் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

மயிலாடியில் 60.4 மி.மீ. பதிவு

பேச்சிப்பாறை அணை - 15.8, பெருஞ்சாணி அணை- 38, சிற்றாறு அணை-1- 4.2, புத்தன் அணை- 37.4, மாம்பழத்துறையாறு அணை- 16, முக்கடல் அணை-8, பூதப்பாண்டி- 25.2, கன்னிமார்- 18.2, மயிலாடி- 60.4, நாகர்கோவில்- 28.2, சுருளக்கோடு- 37.4, தக்கலை- 28.4, குளச்சல்-2, இரணியல்- 6.4, பாலமோர்- 21.6, ஆரல்வாய்மொழி- 13, அடையாமடை- 52, முள்ளங்கினாவிளை- 2.1, ஆனைக்கிட்கு- 9.2 என்ற அளவில் மழை பதிவாகியது.

இதில் அதிகபட்சமாக மயிலாடி பகுதியில் 60.4 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது.

அணைகள் மூடப்பட்டன

இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 271 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 123 கன அடி தண்ணீரும், சிற்றாறு-1 அணைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீரும், சிற்றாறு-2 அணைக்கு வினாடிக்கு 32 கன அடி தண்ணீரும் வருகிறது. அணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவில் நகரின் குடிநீருக்காக வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதியில் 2 மரங்கள் விழுந்தன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு