மாவட்ட செய்திகள்

அக்னி நட்சத்திரம் விடை பெற்றநாளில் தாராபுரம், காங்கேயத்தில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

அக்னி நட்சத்திரம் விடை பெற்றநாளில் தாராபுரம், காங்கேயத்தில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தாராபுரம்,

அக்னி நட்சத்திரத்தின் கடைசி நாளாள நேற்று தாராபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் பின்னர் மாலை 4 மணிக்கு வானில் கருமேக கூட்டங்கள் ஒன்று கூடின. மாலை 6.30 மணியளவில் லேசான காற்று மற்றும் தூறலுடன் ஆரம்பமான மழை நேரம் செல்ல செல்ல இடி, மின்னலுடன் பலமாக பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டி தீர்த்த மழையால் தாராபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பாய்ந்து ஓடியது.

தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மழையால் இரவு 7 மணிமுதல் இரவு 8.15 மணி வரை மின்சாரம் தடைபட்டது. இந்த மழையால் தாராபுரம் பகுதியில் நிலவி வந்த வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவியது.

காங்கேயம்

அதுபோல் காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணிவரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அது மட்டுமல்ல பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், ஆங்காங்கே மரக்கிளைகள் ஒடிந்தன. நேற்று பெய்த மழையால் தாராபுரம், காங்கேயம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்