மாவட்ட செய்திகள்

கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப் பொழிவால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தினத்தந்தி

அரியலூர்,

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் டிசம்பர் மாதத்தில் கடும் பனிப் பொழிவு இருக்கும். ஆனால் கடந்த மாதம் பனிப்பொழிவு குறைவாக இருந்தது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிக மாகவே உள்ளது. இந்த பகுதி களில் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கி மறுநாள் காலை 8 மணி வரை கடும் குளிர் நிலவுகிறது. காலை நேரத்தில் உள்ள கடும் குளிரால் ஏதோ ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் இருப்பதுபோல் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் உணருகின்றனர். இதனால் காலை நேரத்தில் வெளியே செல்லாமல் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

மேலும் பொதுமக்கள் காலையில் தாமதமாக எழுந்திருக்கும் நிலையும் காணப் படுகிறது. அதே வேளையில் பகல் நேரத்தில் வெயில் நன்கு அடிக்கிறது. இருவேறு கால நிலைகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்கிடையே வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தற்போது வழக்கத்துக்கு மாறாக இதுவரை இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் நேற்று காலை நேரத்தில் வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் அவர்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி பயணிக்கிறார்கள். எல்லோரும் குளிரைத் தடுக்கும் கம்பளி ஆடைகளை அணிந்தபடி செல்ல வேண்டி இருக்கிறது. அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்கள், இந்த கடும் குளிருக்கு பயந்து காலை 8 மணிக்கு மேல் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். தேசிய, மாநில நெடுஞ்சாலையில் வாகனங்களும், கனரக வாகனங்களும் பனிப்பொழிவுக்கு பயந்து மெதுவாக பயணிக்கும் சூழல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு