மாவட்ட செய்திகள்

ஏலகிரிமலை சுற்றுலா தலத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு

ஏலகிரிமலை சுற்றுலா தலத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் சிவன்அருள் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

ஜோலார்பேட்டை,

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. தற்போது தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா தலங்களுக்கு தடை நீடிக்கிறது. திருப்பத்துர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சுற்றுலா தலமான ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலையில் உள்ள படகு நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கலெக்டர் சிவன்அருள் நேற்று ஏலகிரிக்கு சென்று அங்கு நடைபெறும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.பிரேம்குமார், என்.சங்கர், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் கார்த்திகேயன் உள்பட பலர் உடனிருந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது