மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் போலீஸ் டி.ஜி.பி. தொடங்கி வைத்தார்

மங்கலத்தில் காவல்துறை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

வில்லியனூர்,

வில்லியனூரை அடுத்த மங்கலத்தில் காவல்துறை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமை தாங்கினார். போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

பின்னர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி போலீசார், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் தற்கொலை தடுப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன், பெரியசாமி, வேலய்யன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்