மாவட்ட செய்திகள்

நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவ, மாணவிகளை அரசு பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவ, மாணவிகளை அரசு பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தில் ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 23 மாணவர்களும், 29 மாணவிகளும் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 2 உதவி ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது ஒரே ஒரு ஆசிரியர் மாற்று பணியில் பணியாற்றி வருகிறார்.

எனவே பள்ளிக்கு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் பள்ளிக்கு நிரந்தரமாக ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி நேற்று மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வெறிச்சோடி கிடந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாப்பிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் நல தாசில்தார் பெருமாள், வருவாய் ஆய்வாளர் பழனி ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஒரு ஆசிரியரை கூடுதலாக மாற்று பணியில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு