மாவட்ட செய்திகள்

பிரபல பாடகரின் தந்தையை தாக்கியதாக வினோத் காம்பிளி, மனைவி மீது போலீசில் புகார்

பிரபல பாடகரின் தந்தையை தாக்கியதாக வினோத் காம்பிளி மற்றும் அவரது மனைவி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்பிளி. இவர் மனைவி ஆன்ட்ரியா மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மலாடு பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்று இருந்தார். அப்போது வினோத் காம்பிளியின் மனைவியை பிரபல பாடகர் அங்கித் திவாரியின் தந்தை ராஜேந்திர திவாரி தெரியாமல் தொட்டு விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆன்ட்ரியா பாடகரின் தந்தையை தாக்கி உள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது வினோத் காம்பிளி, பாடகரின் தந்தை மற்றும் பாடகரின் சகோதரர் அங்குர் திவாரி ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாடகரின் தந்தை பாங்குர்நகர் போலீசில் வினோத் காம்பிளி, அவரது மனைவி மீது புகார் அளித்துள்ளார். இதேபோல வினோத் காம்பிளியின் மனைவி பாடகர் அங்கித் திவாரியின் தந்தை மீது போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இரு தரப்பு புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு