மாவட்ட செய்திகள்

மருந்து கடையில் பொதுமக்களுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்த கணவன்-மனைவி கைது

மருந்து கடையில் பொதுமக்களுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 52). இவருடைய மனைவி சசிகலா (48). பட்டதாரிகளான கணவன்-மனைவி இருவரும் கடந்த 2002-ம் ஆண்டு முதல் வெள்ளக்கல் பகுதியில் மேடவாக்கம் பிரதான சாலையில் மருந்து கடை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக இவர்களது மருந்து கடையில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக வரும் பொதுமக்களுக்கு ஊசிபோட்டு சிகிச்சை அளிப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு புகார்கள் வந்தன.

கணவன்-மனைவி கைது

இதையடுத்து பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அந்த மருந்து கடையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதில் உடல்நலம் பாதித்த சிலருக்கு கணவன்-மனைவி இருவரும் மருந்து கடையில் மருத்துவம் பார்த்து ஊசி போட்டதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது