துறையூர், மார்ச்.19-
துறையூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இந்திரா காந்தி நேற்று அடிவாரம் எம்.ஜி.ஆர். நகர், கிழக்கு வாடி, நாகலாபுரம், கீழ
குன்னுப்பட்டி, புளியம்பட்டி, நல்லியம்பாளையம், முத்தையம்பாளையம், மேலே நடுவலூர், பகளவாடி, கோட்டாத்தூர், புத்தனாம்பட்டி, காளிப்பட்டி, ஈச்சம்பட்டி, பொண்ணு சங்கம்பட்டி உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லுமிடம் எல்லாம் அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், கையை உயர்த்தி இரட்டை இலை சின்னத்தை காட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். அப்போது, அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் பேசிய இந்திராகாந்தி, நான் உங்களில் ஒருவா. உங்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறேன். மீண்டும் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தவுடன் என்னிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு காண்பேன் என்றார்.
பிரசாரத்தின் போது, துறையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சேனை செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி பொன் காமராஜ், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் அழகாபுரி செல்வராஜ், ராம்மோகன், முன்னாள் யூனியன் சேர்மன் மனோகரன் மற்றும் பேரூராட்சி கழக செயலாளர்கள் ராஜேந்திரன், உப்பிலியபுரம் நகர செயலாளர் ராஜாங்கம், துறையூர் நகர செயலாளர் செக்கர் ஜெயராமன், முசிறி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் ஊராட்சி செயலாளர் ஞானசேகரன், சாந்தி, மருதை, தங்கதுரை, புத்தனாம்பட்டி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் ஆனந்தகுமார், எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் அன்பழகன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் செந்தில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுலோச்சனா ராமச்சந்திரன், அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவினர் கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டார்கள்.