பெங்களூரு,
மகதாயி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி குறிப்பாக குடிநீர் தேவைக்கு தண்ணீரை பெற்றுத்தர கோரி வட கர்நாடக விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறினார். ஆனால் அவர் அளித்த வாக்குறுதிப்படி தண்ணீரை பெற்றுத்தரவில்லை.
இதனால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டால் குடிநீர் தேவைக்கு தண்ணீரை பெற்றுத்தர முடியும். குடிநீர் என்பது அடிப்படை உரிமை. இதுகுறித்து இடைக்கால நிவாரணம் கோரி நடுவர் மன்றத்திலும் மனு ஒன்றை தாக்கல் செய்யலாம். விவசாயிகளின் போராட்டத்தை எங்கள் கட்சி ஆதரிக்கிறது.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.