மாவட்ட செய்திகள்

டி.கல்லுப்பட்டி, பேரையூர் பேரூராட்சி பகுதிகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுத்தால் இணைப்பு துண்டிப்பு

டி.கல்லுப்பட்டி, பேரையூர் பேரூராட்சி பகுதிகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று செயல் அலுவலர்கள் எச்சரித்துள்ளார்.

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி, பேரையூர் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் முறைகேடாக மின்மோட்டார் வைத்து குடிநீர் திருடினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும், மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செயல் அலுவலர்கள் முருகேசன், சின்னசாமிபண்டியன் ஆகியோர் கூறியதாவது:- 2 பேரூராட்சிகளிலும் தலா 15 வார்டுகள் உள்ளன.

இங்குள்ள பொதுமக்கள், மற்றும் குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு உள்ளுரில் உள்ள ஆழ்துளை கிணறு மூலமும், கூட்டுகுடிநீர் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் வாய்ப்பு உள்ளதால் பற்றாக்குறையை சரிசெய்து அனைவருக்கும் குடிநீர் சமமாக வழங்கவேண்டும்.

எனவே 2 பேரூராட்சி பகுதிகளிலும் தற்போது குடிநீர் இணைப்பு பெற்றவர்களில் பலர் மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுத்து வருவதாக புகார்கள் வருகின்றன. இதனால் மின்மோட்டார் இல்லாத வீடுகளிலும், பொது குழாய்களிலும் குடிநீர் வருவது தடைபடுகிறது. அனைவருக்கும் சமமான அளவில் குடிநீர் வழங்குவதற்கு 2 பேரூராட்சிகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ஆகையால் குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் தங்கள் இணைப்புகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுத்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு